புளோரிடா: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப்பை மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் புதன்கிழமை அன்று புளோரிடாவில் சந்தித்துள்ளார். இருவரும் மார்-எ-லாகோ கிளப்பில் சந்தித்துள்ளனர்.
இது குறித்து ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் வெள்ளை மாளிகையின் துணை தலைமை அதிகாரியாக செயல்பட உள்ள ஸ்டீபன் மில்லர் தெரிவித்தது, “அனைத்து தொழில் நிறுவன தலைவர்களும் ட்ரம்ப்பின் பொருளாதார திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவே மார்க் ஸூகர்பெர்கும் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதில் அவர் உறுதியாக உள்ளார். அது அவரது ஆர்வமாக உள்ளது” என்றார்.