இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,235 புள்ளிகள் (1.60%) சரிந்து 75,838-ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 299 புள்ளிகள் (1.28%) குறைந்து 23,045-ஆகவும் நிலைபெற்றன.
டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட கையோடு சொந்த நாட்டின் நலன் கருதி வெளிநாடுகளின் வர்த்தகத்தின் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, சோமாட்டோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்தன.