‘விருது’ என்பது ஒருவரின் சாதனை, திறமை அல்லது சேவையைப் பாராட்டி அவரை கவுரவிக்க வழங்கப்படும் அடையாளம். அந்த வகையில் உலகின் உயரிய விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. ஸுவீடன் அரசு இந்த மிகப் பெரிய அங்கீகாரத்தை அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், அமைதி எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குகிறது. இவற்றில், அமைதிக்கான நோபல் பரிசுதான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குறி. இப்போது என்றால் இப்போது அல்ல, அவர் முதன்முறை அதிபராக இருந்தபோதிருந்தே இந்த நோபல் மீது ‘இரு கண்களும்’ இருந்து வருகிறது.
‘தீராத மோகம்’ – அமைதிக்கான நோபல் பரிசு மீதான ட்ரம்ப்பின் மோகம் எத்தகையது என்றால், சில மாதங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரை வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது அவரிடம் வெளிப்படையாகவே ஆதங்கத்தைப் பதிவு செய்யும் அளவுக்கு கட்டுக்குள் அடங்காதது.