தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,450-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600-க்கும் விற்பனையானது.