கோவை: கோவையில் ஒரு சவரன் தங்கம் ஜிஎஸ்டி சேர்த்து இன்று (அக்.14) ரூ.98,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. வழக்கமாக ஒரு நாளுக்கு ஒரு முறை விலையில் மாற்றம் (ஏற்றம் அல்லது இறக்கம்) காணப்படும் நிலையில் சமீப நாட்களாக தினமும் இரு முறை விலையில் மாற்றம் காணப்படுகிறது. பெரும்பாலும் விலை உயர்வே காணப்படுகிறது. கோவையில் எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை (3 சதவீத) ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இன்று ரூ.98,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் பெற்ற தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.