சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து நேற்று ரூ.64,320-க்கு விற்பனையானது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அண்மையில் தங்கம் விலை உயர்ந்தது. அதேநேரத்தில், தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,040-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.64,320-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.70,168-க்கு விற்பனையானது.