சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 136 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,36,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.