சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.28) கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையாகிறது.
உலக அளவில் தங்கத்துக்கான தேவை அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும், ஏப்ரல் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத பல புதிய உச்சங்களைத் தொட்டுவந்த நிலையில் கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை இன்று கிராமுக்கு மேலும் ரூ.62 குறைந்துள்ளது.