தமிழகம் முழுவதும் உள்ள தட்டச்சு பயிலகங்களில் இனி புதிதாக சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் 99’ விசைப்பலகை மூலம் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு பயிலகங்களில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ், ஆங்கில தட்டச்சு பயிற்சியையும் சுருக்கெழுத்து பயிற்சியையும் பெறுகின்றனர். வேலைவாய்ப்புகளைப் பெற முக்கிய திறனாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி இருப்பதால் இந்த பயிற்சி இளைஞர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. தட்டச்சு பயிற்சி மையங்களில் தற்போது பழைய தட்டச்சு இயந்திரங்களின் விசைப்பலகை மூலமே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.