
கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான போட்டி கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.
இஷான் கிஷன் 125, சாஹில் ராஜ் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜார்க்கண்ட் அணி 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 247 பந்துகளில், 15 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 173 ரன்களும், சாஹில் ராஜ் 183 பந்துகளில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

