சென்னை: “ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. நான் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க தயாரா?”: என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சில கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் நடத்தி வரும் விளம்பர மாடல் அரசியலில் இன்றைய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. தமிழில் புதிது புதிதாக பெயர் வைத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி காலத்தை ஓட்டி வரும் திமுக அரசின் அடுத்த வெளியீடாகவே இந்த மாநில கல்விக் கொள்கை வெளியாகி இருக்கிறது.