சென்னை: தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை நேற்று விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த முறை 2024 அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடைசி நேரத்தில் கரையை கடப்பதற்கு முன்பு ஃபெஞ்சல் புயல் உருவானது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகம் வழியாக ஆந்திரா வரை சென்று, திரும்பி மீண்டும் தமிழகம் நோக்கி வந்தது என பல்வேறு விநோதங்கள் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்தன. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் 59 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 33 சதவீதம் அதிகம்.