சென்னை: “திமுகவினரை பார்த்து கேள்வி எழுப்பினால் தமிழக மக்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவமானப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்றம் செய்கிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பிய கேள்விகளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 10) அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர். மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் இன்று திமுகவினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களை வஞ்சித்து திமுகவினர் செய்யும் கபட அரசியலை அவர் தோலுரித்துக் காட்டியுள்ளார்.