சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி 227 படகுகள், 107 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று படகுடன் சிறைபிடித்தது.
The post தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.