நாகை: நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 துறைமுகங்களில் திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வானிலையை குறிக்கும் வகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 24) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.