
புதுடெல்லி: இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழகத்தில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

