எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000-த்தை குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயி்க்கவும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவதாலும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்வாலும் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இவற்றின் விலையைக் குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறத்தின.