மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களால் எத்தனை விபத்துகள் நேரிட்டுள்ளன, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மனைவி நாகஜோதி, மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக உள்ளார். அதிமுக 53-வது ஆண்டு விழாவையொட்டி விளாங்குடி பகுதியில் உள்ள பழைய அதிமுக கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் வைக்க அனுமதி கோரி, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், அனுமதி வழங்கவில்லை.