சென்னை: “திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும், அமைப்பேன்” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் சசிகலா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கருணை இல்லத்தில் முதியவர்கள் உடன் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோருக்கு உணவும் பரிமாறினார்.