சென்னை: தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2024ல் பாஜக ஒன்றிய அமைச்சர் ஷோபா; தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்றார். 2025ல் பாஜக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்; தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என்கிறார். பாஜக அரசு கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
The post தமிழர்கள் மீது பாஜகவினருக்கு வன்மம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.