சென்னை: தமிழ்நாடு சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறை கைதிகள் நலன் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், புழல் சிறையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிறை கைதிகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என மனுதாரர் புகார் அளித்திருந்தார். மாநில சிறைகளில் வெளிநாட்டு கைதிகளுக்கான விதிமுறைகள் எதுவும் இருந்தால் அடுத்த விசாரணையில் தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
The post தமிழ்நாடு சிறையில் உள்ள வெளிநாட்டு சிறைக் கைதிகளுக்கு விதிகளை வகுக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.