சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 11, 12, 13, 16, 17 ஆகிய 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் டிச 13, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
The post தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.