சென்னை : தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதி கொடுத்திருக்கிறோம் என பட்டியலிட முடியுமா? என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இந்தியை திணிக்க மாட்டோம், நீட் விலக்கு தருவோம் என்று உறுதி அளிக்க முடியுமா? எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பேசிய அவர், “ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசுகள் என்ன பிச்சைக்காரர்களா என்று முதல்வராக இருந்தபோது மோடி கேட்டார். பிரதமரான உடனேயே மாநிலங்கள் நிதி கேட்டால் அழுவதாக மோடி விமர்சிக்கிறார். மாநிலங்கள் அழுவதாக மோடி கூறுவது எந்த வகையில் நியாயம். தமிழ்நாட்டில் 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். டெல்லியின் ஆளுமைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது.அமித் ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் நான் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆள முடியாது,”என்றார்.
The post தமிழ்நாட்டில் 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.