கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் இந்தி மொழியை நாங்கள் என்றைக்கும் எதிர்க்கவில்லை. சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் ஆண்டுக்கு 3 லட்சம் மாணவர்கள் இந்தி படிக்கின்றனர். இதை திமுக அரசு தடுக்கவில்லை. இந்தி திணிப்பு என்று சொல்லும்போது தான் எதிர்ப்பு குரல் எழுப்புகிறது.
மொழி பிரச்னையில் தமிழக முதல்வர் என்ன முடிவு எடுக்கிறாரோ அது தான் மாநில மொழிகளுக்குரிய வழிகாட்டுதல், வரப்பிரசாதம். தமிழ்நாடு எடுத்துள்ள நல்ல முடிவை ஆந்திரா சார்பில் வரவேற்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். எனவே ஒற்றை வரியை எடுத்து கொண்டு மொழி பிரச்னையில் விளையாடாமல் ஒட்டுமொத்த கருத்து எதுவோ அதை ஏற்று கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருத திணிப்பு எடுபடாது. இது பெரியார் பூமி. எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய தமிழ்நாடு. இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எடுபடாது: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.