2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு முழுமையாக ஏற்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கையைக் காரணம் காட்டி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த இரு மொழிக் கொள்கை அமலுக்கு வந்தது எப்படி?