ரிலையன்ஸ் ஜியோ, தமிழ்நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. முக்கியமான குரல் மற்றும் தரவுப் பயன்பாட்டு அளவீடுகளில் போட்டியாளர்களை முந்திய நிலையில் உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டி.ஆர்ஏஐ (TRAI) நடத்திய சமீபத்திய சுயாதீன டிரைவ் சோதனை, (Independent Drive Test IDT) ஜியோவின் அர்ப்பணிப்பு, மற்றும் ஜியோவின் முன்னேற்றமிக்க,எதிர்காலத்திற்குத் தயார் நிலையில் உள்ள மொபைல் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் உயர்தர டிஜிட்டல் அனுபவத்தை உறுதி செய்கின்றது.
டிஆர்ஏஐ அறிக்கையின் படி, ஜியோ 5G மொத்த பதிவிறக்க வேகத்தில் சதவீதம் 195.61 Mbps என சாதனை புரிந்துள்ளது, இது மாநிலத்தில் உள்ள பிற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை விட மிக உயர்ந்ததாகும். இது ஜியோவின் தொழில்நுட்ப மேன்மையை பிரதிபலிக்கிறது. அதிவேக வீடியோ ஸ்ட்ரீமிங், தாமதமில்லா ஆன்லைன் கேமிங், விரைவு செயலி பதிவிறக்கம் மற்றும் இடையீடற்ற உலாவல் ஆகியவற்றை உறுதி செய்யும் ஜியோவின் 5G சேவைகள், டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னேறிய பயனாளர்களுக்கான முதன்மை தேர்வாக திகழ்கின்றன.
தமிழ்நாட்டில் ஜியோ குறைந்த தாமதம் (Low Latency) கொண்ட தரவுப் பரிமாற்றத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது வீடியோ அழைப்புகள், மெய்நிகர் கூட்டங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங்கிற்குப் பொறுத்தமானதாக உள்ளது. தரவுகள் விரைவாக பரிமாறப்படுவதால், பயனாளர்களுக்கு விரைவான, சிறந்த பதிலளிக்கும் அனுபவத்தை வழங்கி, நேரடி தொடர்பை குறைந்த தாமதத்துடன் இயலுமைப்படுத்துகிறது.
தரவு சேவைகளுடன் கூடுதலாக, ஜியோவின் குரல் சேவைகளும் சிறப்பாகச் செயல்பட்டன என IDT சுட்டிக்காட்டியுள்ளது. அழைப்பு தொடங்கும் வெற்றிகரமான வீதம், அதிவேக அழைப்பு இணைப்பு நேரம் மற்றும் மிகுந்த தெளிவான குரல் தரம் ஆகியவை ஜியோவை வீடுகளிலும் பயணங்களிலும், மக்களிருக்கும் இடங்களிலும் நம்பகமான மற்றும் இடையீடற்ற குரல் தொடர்பை வழங்கக்கூடிய பிரியமான தொலைத்தொடர்பு நெட்வொர்க்காக உருவாக்கியுள்ளது.
இந்த டிரைவ் சோதனை சென்னை முதல் கோயம்புத்தூர் வரை தமிழ்நாட்டின் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டது – தொழில் மையங்கள், குடியிருப்பு பகுதிகள், போக்குவரத்து மிகுந்த வழித்தடங்கள் மற்றும் நடைக்கு உகந்த பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த சோதனையின் போது, ஜியோவின் அடர்த்தியான மற்றும் நன்கு மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் கட்டமைப்பு அனைத்து தர அளவீடுகளிலும் உயர்தர செயல்திறனை வெளிப்படுத்தியது. இது கடுமையான சூழ்நிலைகளிலும் நிலையான தரத்தை வழங்கும் ஜியோவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
The post தமிழ்நாட்டில் உன்னதமான நெட்வொர்க் மற்றும் பதிவிறக்க வேகத்துடன் ஜியோ புதிய அளவுகோலை நிலைநிறுத்துகிறது appeared first on Dinakaran.