திருவனந்தபுரம் : தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் தொடர்பாக கேரள அரசு மீது அம்மாநில உயர் நீதிமன்றம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மருத்துவக் கழிவுகளை கையாளுவதில் கேரள அரசு தோல்வியடைந்துள்ளது என தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் : கேரள அரசு மீது உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.