சென்னை: தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்யலாம். நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 இடங்களில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை வனத்துறை தடை விதித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டுத்தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை தடை விதித்துள்ளது வனத்துறை appeared first on Dinakaran.