சென்னை: தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று என ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,
ஒன்றிய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காவிட்டால் தமிழ்நாடு ரூ.5,000 கோடி இழக்க நேரிடும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கல்வி நிதி மறுப்பு – பாஜக அரசுக்கு அதிமுக கண்டனம்
ஒன்றிய அமைச்சரின் பேச்சு ஒன்றிய அரசின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காததால் மக்களிடையே கோபம். தமிழ்நாடு மாணவர்கள் ஆங்கில அளவில் புலமை பெற்றதால்தான் உலகளவில் கோலோச்சி வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கை தேவையில்லை – அதிமுக உறுதி
மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மும்மொழி திணிப்பை கைவிடுக
தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு உண்மை நிலையை உணர்ந்து மும்மொழிக் கொள்கை திணிப்பை கைவிட வேண்டும்.
கல்வி நிதி மறுப்பு – தமிழ்நாட்டுக்கு துரோகம்
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க மறுப்பது மாணவர், ஆசிரியர், தமிழ்நாடு மக்களுக்கு ஒன்றிய அரசு செய்யும் துரோகம். ஒன்றிய அரசின் துரோகத்தால் தமிழ்நாடு மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை எந்த நிபந்தனையும் இன்றி உடனே வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று: ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.