ஹைதராபாத்: வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் 55 வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த வாரிசு, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த ‘சங்கராந்திக்கு ஒஸ்தானு' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவருமான தில்ராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய 55 குழுவினர், 8 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.