சென்னை: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.