மதுரை: “நான் முன்னேற்றத்துக்கு எதிரானவன் அல்ல என்று விஜய் பேசுகிறார். விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தம் வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையம் அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சினைகள் புரிவதில்லை” என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
நேதாஜி பிறந்தநாளை ஒட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நேதாஜியின் ஐஎன்ஏ-வில் பெருவாரியாக இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதில் முத்துராமலிங்க தேவர் மிகப் பெரிய பங்காற்றினார். காரைக்குடியில் தமிழக முதல்வர் பேசும்போது நிலை தடுமாறி பேசி உள்ளார். ‘வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள்.’ என்று பேசியுள்ளார்.