வாஷிங்டன்: தவறான பிரச்சாரத்தை தடுக்கும் விதமாக 11,000 யூடியூப் சேனல்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்கா கொள்கைகளை விமர்சிக்கும் வகையிலான விடீயோக்களை தொடர்ந்து வெளியிட்டுவந்த சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 7,700 யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா, சீனா மட்டுமின்றி பிரச்சார நோக்கத்தில் செயல்பட்ட மற்றொரு நாடுகளுக்கு சொந்தமான யூடியூப் சேனல்களையும் கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் சுமார் 30,000 கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளதாக கூறபடுகிறது. உலக அளவிலான இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக கூகுள் பகுப்பாய்வு குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post தவறான பிரச்சாரத்தை தடுக்கும் விதமாக 11,000 யூடியூப் சேனல்களை அதிரடியாக நீக்கியது கூகுள் நிறுவனம்.. appeared first on Dinakaran.