சென்னை: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு தவெகவில் புதிய பொறுப்புகளை வழங்கி நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இரண்டு கட்டங்களாக 38 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.