ஹைதராபாத்: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர்.