சென்னை: பாஜக மாநில மையக்குழு கூட்டத்தை தொடர்ந்து பேசிய மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறிக்கோளற்றது எனவும், அது எந்த பலனும் இல்லாதது எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில மையக்குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் பங்கேற்றனர்.