சென்னை: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழு வெளிநாடு செல்ல உள்ளது.
இந்த நிலையில் அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பி பலரும் பல்வேறு விதமான கருத்து தெரிவிக்கின்றனர். அது போன்ற குழப்பங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆகையால் உண்மையை வெளிக்கொண்டுவர அரசியல் வேறுபாடுகளை மறந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க இருக்கிறோம்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 8 எம்பிக்கள் குழு ரஷ்யா புறப்படுகிறது. நாளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரிகளை குழு சந்திக்கிறது. ரஷ்யாவை தொடர்ந்து ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா செல்கிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து வெளிநாடுகளிடம் குழு விளக்கம் அளிக்கிறது.
The post திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு இன்று வெளிநாடு பயணம்..!! appeared first on Dinakaran.