சென்னை: திராவிட மாடல் எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக அரசையும், இயக்கத்தின் இருபெரும் தலைவர்களை புறக்கணித்த கயவர் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட ஜெயலலிதா பிறந்தநாளில் நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்றார் அண்ணா… “எதிர்ப்பை தாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல, அத்தகைய எதிர்ப்பின் நடுவிலும் கடமையைச் செய்வதே பெருமைக்குரியது” என்றார் எம்.ஜி.ஆர்… இருபெரும் தலைவர்களின் வழித்தடங்களை பின்பற்றி எதிர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் மத்தியில் எண்ணற்ற சாதனைகளை படைத்து தமிழக மக்களின் மனதில் தனக்கென இடத்தை தக்கவைத்திருப்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.