சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும்.
மேலும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும், மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் – வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலாப் பணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திட ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.