ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென நில அதிர்வுடன் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்தனர். நில அதிர்வா? அல்லது எரிகல் ஏதேனும் விழுந்ததா? என மக்கள் சந்தேகமடைந்தனர்.
அதேநேரத்தில் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் வானில் வெள்ளை நிற புகை படிவம் தென்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வருவாய்த்துறையினர், கந்திலி போலீசார் ஆகொரட்டி பகுதி அருகே உள்ள மைக்காமேடு, செல்லரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
The post திருப்பத்தூர் பகுதியில் திடீர் நில அதிர்வா? appeared first on Dinakaran.