மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட ஒரு மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது காவல்துறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு நேற்று முன்தினம் இந்து அமைப்பினர் செல்வதைத் தடுக்க காவல்துறை மதுரையில் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு, கடும் கெடுபிடிகளை போலீஸார் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, மதுரை மாவட்டத்தின் அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பையும் மீறி திருப்பரங்குன்றத்துக்குள் நுழைந்து குழுக்களாக வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய வர்களையும் கைது செய்தனர். சில நூறு பக்தர்கள் மட்டும் அவ்வப் போது கோஷம், போராட்டம் என நடத்தியதை 4 ஆயிரம் போலீஸார் கட்டுப்படுத்தினர்.