சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்று (டிச.06) மாலை திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர், அறநிலையத்துறை செயலாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவில் உள்ள சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு, எவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை பரிசீலித்து, வருகின்ற பகதர்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இன்று மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.