திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 286 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ரூ.65 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் 10 பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலை மை வகித்தார்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டு மனைபட்டா, குடும்ப அட்டை, கல்விக்கடன், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 286 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்.
இதனையடுத்து அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் சாருஸ்ரீ வழங்கி பொதுமக்களின்மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இக்குறைதீர் நாள் கூட்டத்தில், அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கலெக்டர் சாருஸ்ரீ கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து500 வீதம் மொத்தம் ரூ 65 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ சண்முகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் அலுவலர்கள் கல ந்து கொண்டனர்.
The post திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.