திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் குவளைக்கால் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும்வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக்கண்காட்சியானது நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் ஏற்கனவே துவக்கி வைக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், வானவில் மன்றம், பசுமை தமிழகம், நம்ம பள்ளி பவுண்டேசன், நம்ம பள்ளி, நம்ம பெருமை, எண்ணும் எழுத்தும், கல்லூரி கனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்,
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு தொழில் சார் கடனுதவி வழங்குதல், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம்,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் மாவட்டத்தில் பிறதுறைகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்போன்றவை குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தநிலையில் இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.