வாஷிங்டன்: திறமை வாய்ந்த மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தான் விரும்புவதாகவும், இத்தகையவர்கள் அமெரிக்காவுக்குத் தேவை என்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹெச்1-பி விசா விவகாரத்தை முன்வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை ஆரக்கள் நிறுவனத்தின் சிடிஓ லேரி எல்லிசன், சாஃப்ட்பேங்க் சிஇஓ மசயோஷி சன், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மென் உள்ளிட்டோரைச் சந்தித்தார். பின்னர் அவர்களுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், "ஹெச்-1பி விசா மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு வருவது தொடர்பாக முன்வைக்கப்படும் வாதத்தின் இரு பக்கங்களையும் விரும்புகிறேன். அதேநேரத்தில், நம் நாட்டுக்கு வரும் மிகவும் திறமையான மனிதர்களை நான் விரும்புகிறேன்.