ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தொடர்ந்து 3-வது நாளாக திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜுவின் வீடு, அலுவலகங்களிலும், புஷ்பா – 2 திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடு, அலுவலகங்களிலும், இவர்களுக்கு நிதி உதவி செய்த நிறுவனங்களிலும் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
புஷ்பா-2 திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்ததாக அத்திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்தது. மேலும், நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் வசூலில் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ராம்சரண் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படமும் ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தையே கொடுத்ததாக கூறப்பட்டது.