புளோரிடா: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை தேர்வு செய்துள்ளார். இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை, பொதுச் சுகாதாரம், மனித சேவைகள், மருந்து, உணவுப் பாதுகாப்பு, மருத்துவ ஆய்வு, தடுப்பூசிகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான செயலராக ட்ரம்ப் அறிவித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கென்னடி நியமனம் குறித்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூகவலைதளத்தில், “பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்கர்கள் நீண்ட காலமாகவே உணவு தொழில்துறை, மருந்துத் துறையின் மோசடிகள், தவறான தகவல் மற்றும் குறைவான தகவல்களினால் நசுக்கப்பட்டுள்ளனர். கென்னடி நாள்பட்ட தொற்று நோய்களை முடிவுக்குக் கொண்டுவந்து அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமான தேசமாக மாற்றுவார் ". என்று குறிப்பிட்டுள்ளார்.