நெல்லை: அதிமுகவிடம் துணை முதல்வர் பதவி பற்றி பேச்சுவார்த்தை நடந்ததா என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி அளித்தார். நெல்லையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் எந்தவித இழுபறியும் இல்லாமல் பாஜ கூட்டணி அமைத்துள்ளது.
இந்தக் கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில் துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை குறித்து அதிமுகவுடன் நாங்கள் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அத்தியாவசிய துறையான போக்குவரத்து துறையில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை அரசு முறையாக நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post துணை முதல்வர் பதவி பற்றி அதிமுகவுடன் பேசப்பட்டதா? நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.