சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அரசு அனுமதியின்றி தனியாக பவுண்டேசன் தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை விதித்து கடந்தாண்டு ஜனவரியில் உத்தரவிட்டது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கில் முழு வீச்சில் விசாரணை நடைபெற்று தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
The post துணைவேந்தர் மீது குற்றப்பத்திரிகை: ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.