சியோல்: தென் கொரியாவில் கடந்த டிசம்பம் 3ம் தேதி ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதற்காக அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, யூன் சுக் யோலுக்கு எதிராக ராணுவம், போலீசாருடன் இணைந்து ஊழல் புலனாய்வு அமைப்பு கூட்டு விசாரணை நடத்துகிறது. புலனாய்வு அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் யோலை கைது செய்ய அதிபரின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அதிபரின் பாதுகாப்பு படையினரும், அவரது கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோரும் குவிந்து தடுத்தனர். இதனால் யோலை கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பினர். இந்நிலையில், யோலை கைது செய்ய 2வது முறையாக நேற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இம்முறை கட்சி தொண்டர்களை சமாளிக்க 1000 போலீசார் குவிக்கப்பட்டனர். அதிபரின் பாதுகாப்பு படையினர் வைத்த தடுப்புகளை தாண்டி புலனாய்வு அதிகாரிகள் ஏணிகள் பயன்படுத்தி ஜன்னல்கள் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பிறகு யோல் கைது செய்யப்பட்டார். அவரை முழு பாதுகாப்புடன் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
The post தென் கொரியாவில் அதிரடி பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் யோல் கைது appeared first on Dinakaran.